Welcome to Illathu Pillaimar Community Site! இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத் தளத்திற்குத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!
இல்லத்துப் பிள்ளைமார் சமுதாய உள்ளங்களின் உறவுகளுக்கான இணையச் சங்கமம்
illathupillaimar

உள்ளடக்கம்
பார்வையாளர்கள்


இல்லத்து உறவுகளே வருக! வருக!!


இல்லத்து உறவுகளே வருக! இனிய உறவுகளே வருக!!

அன்பு உறவினர்களே,

தமிழ்நாட்டில் இல்லத்தார், ஈழவர், பணிக்கர், சீர்குடி வேளாளர் எனும் பெயர்களில் அழைக்கப்படும் இல்லத்துப் பிள்ளைமார் எனும் சமுதாயம் ஐந்து இல்லங்கள் எனும் உறவுக்குள் ஒன்றுபட்டு இருக்கிறது. இச்சமுதாயத்தினர்களுக்கிடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட இணையத்தில் ஒரு தளத்தை உருவாக்கினால் என்ன? என்கிற நம் உறவினர்கள் பலரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தளத்தில் தற்போது சில தலைப்புகள் உள்ளன. இந்தத் தலைப்புகளில் சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஒரு சில தலைப்புகளில் தகவல்கள் இல்லாமல் இருக்கலாம். அப்படி தகவல்கள் இல்லாத தலைப்புகளில் தங்களுக்குத் தெரிந்த தகவல்கள் ஏதேனும் இருப்பின் msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அந்தத் தகவல்களை அனுப்பி வைக்கலாம். சிறந்த தகவல்கள் உடனுக்குடன் தளத்தில் இடம் பெறும்

“நிகழ்வுகள்” எனும் தலைப்பில் வெளியிடுவதற்கு தங்கள் ஊர்களில் நடைபெற்ற சமுதாய நிகழ்வுகள் குறித்த செய்திகளைப் படங்களுடன் அனுப்பி வைக்கலாம்.

“மணமக்கள் தேவை” பகுதிக்கு மணமகன் அல்லது மணமகள் தேவை குறித்த செய்தியை அந்தப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்துத் தகவல்களுடன் அனுப்பி வைக்கலாம். அந்தக் குறிப்புகள் அனைத்தும் இலவசமாக இடம் பெறும்.

இந்தத் தளத்தில் வேறு என்ன செய்திகள் இடம் பெற்றால் நன்றாக இருக்கும்? என்கிற ஆலோசனைகளையும், தளம் குறித்த மேலான கருத்துக்களையும் msmuthukamalam@yahoo.co.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.


நம் சமுதாய உறவினருக்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு


தமிழ்நாடு அரசு, தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆண்டுதோறும் 31 தலைப்புகளின் கீழ் சிறந்த நூல்களைத் தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 2010 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களுக்கான பட்டியலில் 27 நூல்களில் முத்துக்கமலம் இணைய இதழின் ஆசிரியரும் நம் சமுதாய எழுத்தாளருமான தேனி எம்.சுப்பிரமணி எழுதிய தமிழ் விக்கிப்பீடியா எனும் நூல் கணினியியல் துறையின் கீழ் சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது.

கடந்த ஏப்ரல் 13 அன்று சென்னை, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்ப்புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் தேனி எம். சுப்பிரமணிக்குப் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகைக்கான காசோலை ஆகியவற்றை வழங்கினார்.




இது இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத்திற்கான படைப்பு.

இணைய பக்க முகவரி: http://illathupillaimar.org/